" Inner Peace creates Outer Peace" "அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம் . அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்."

22/11/2010

மன அமைதி

1.உங்களுக்கு பிடித்தமான வேலை அல்லது பொழுதுபோக்கில் நீங்கள் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்களானால் உங்களுக்கு மிகுந்த மன அமைதி கிட்டும்.

2.நீங்கள் உடலளவில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தாலும் மனதை வெறுமையாக வைத்திருக்காதீர்கள்.

3.நீங்கள் எதைஎல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறீர்களோ அந்த எல்லாக்காரியங்களையும் செய்யாமல் நிறுத்துங்கள். அதைப்போல் நீங்கள் செய்யவேண்டும் என்று நினைக்கும் காரியங்களை உடனே தொடங்குவதும் அதுபோல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்

4.ஒவ்வொரு நிலையிலும் நமது பார்வையை தெளிவுபடுத்தி சரியான பாதையை கண்டுபிடிக்க ஆத்மசோதனை தேவைப்படுகிறது.

5.எல்லாவிதத் தூண்டுதல்களிலிருந்தும் விலகி இருங்கள்.தூண்டுதல்கள் உண்டாக்கும் இடத்திற்கு செல்லாதீர்கள்.தூண்டுதல்களை தவிர்க்க போராடவேண்டியதிருக்கும்.

6.பிறரது மன அமைதியைக்குலைக்கும் ஒருவனுக்கு,மன அமைதியை பெற விழைவதற்கும்தகுதி கிடையாது.

7.எவருடனும் அதிகமாக நெருங்கிப்பழக வேண்டாம்.அதிக நெருக்கம் அலட்சியத்தை உருவாக்கி உணர்ச்சிகளை உருக்குலைத்து மன அமைதியைகெடுக்கிறது.

8.எதிலும் எவருக்கும் புத்திமதி சொல்ல போகாதீர்கள்,நீங்கள் கேட்கப்பட்டாலன்றி,உங்கள் வேலையைப்பாருங்கள்.

9.எப்பொழுதும் அடக்கமாக இருங்கள், மற்றும் தற்காலிகமாக கவலையை மறைக்கும் மகிழ்ச்சியைவிட அடக்கம் மேலானது.

10.இறைவனின் நட்பை பெறுங்கள்,அதுவே சிறந்த செல்வம். நீங்கள் முற்றிலும் மனம் தளர்ந்து இருக்கும்பொழுது,மறைநூல்கள் பால் கவனம் செலுத்துங்கள்,மகான்களின் சிறந்த நூல்களை படியுங்கள்.

11.ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இறைவனின் அருளிருக்கிறது என்பதை உணர்ந்து அமைதியாக வாழ்வது தான் அறிவுடைமையாகும்.

No comments:

Post a Comment