" Inner Peace creates Outer Peace" "அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம் . அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்."

02/03/2011


                                                                                                                         page3
     நீங்கள் அடிக்கடி பிறர் விஷயங்களில் தலையிடுகிறீர்களாஅவர்கள் தவறாகவே இருக்கலாம். ஆனால் அதை முன்னிட்டு நீங்கள் அல்லல் உறுவானேன்? யாரையும் எதையும், குறை கூறாதீர்கள்.
      பிறருக்குத் தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை கடவுள் உங்களுக்குக் கொடுக்கவில்லை. எல்லோரும் அவரவர் விருப்பப்படியே நடக்கின்றனர். ஏனெனில் அவர்களுக்குள்ளே இலங்கும் கடவுள் அவர்களை அப்படிச் செய்யத் தூண்டுகிறார்உங்கள் அமைதியைப் பாதுகாக்க நீங்கள் சொந்த வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் என்பது ஒரு நல்ல விதியாகும்.
             வேலை - அதுவே ஒரு தியானம்
      உங்கள் வேலையில் நீங்கள் கவனம் செலுத்துங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக மன அமைதிக்கு முக்கியத்துவம் தருவோர் கடைப்பிடிக்க வேண்டிய நியதி இது. இந்த உலகத்தில் எதுவுமே உங்கள் கவனத்தை வேண்டுவதில்லை. அனைத்தையும் கவனிக்க ஒரு ஆண்டவன் இருக்கிறார். உண்மையில், உங்களையும் கவனிப்பது அவர் தானே. இந்த உண்மையை மறக்கக்கூடாது.
                  குறை கூறலாமா ?
     நான் திரும்பவும் கூறுகிறேன். உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். எவரையும், எதையும் குறை கூறாதீர்கள்.குறை கூறுதல் என்பது திட்டுவதற்கு நிகர். ஏன்? எது நடந்தாலும், அது கடவுளின் இச்சையால் நடக்கிறது. கடவுளின் அனுக்கிரகம் இன்றி எதுவுமே நிகழ்வதில்லைஏதாவது நிகழ்ந்த்து என்றால் அது உங்கள் பார்வையில் நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ இருக்கலாம்.

2 comments:

  1. Anonymous4/3/11 15:59

    yes this very very good nice pls keep it up we are waiting for upcoming pages of that book

    ReplyDelete
  2. இந்த புத்தக தொடர்ச்சிக்கு ஆவலுடன் உள்ளோம் . இந்த பணி மேலும் தொடர ஆதரவு , வாழ்த்து, ஆசிகள்.

    ReplyDelete