" Inner Peace creates Outer Peace" "அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம் . அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்."

05/01/2011

ஜென்




1.       உண்மையான ஜென் என்றால், இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டே இவ்வுலகத்தின் ஒரு தூசியின் மீது கூட பற்று வைக்காதவனாக இருக்க வேண்டும்.

2.        அடுத்தவர்கள் நல்லது செய்தால் அதைப் போல நாமும் செய்ய வேண்டும்என்று மனதுக்கு ஆணையிடுங்கள். அடுத்தவர் தவறு செய்தால் அதைப் போல் நாம் செய்யாமல் இருக்க வேண்டும் என்று உங்கள் மனதுக்கு அறிவுரை சொல்லுங்கள்.

3.       ஒரு இருட்டறையில் இருந்தாலும் உங்கள் முன் உங்களுக்குப் பிடித்த ஒரு விருந்தாளி இருப்பது போலவே உணருங்கள். உங்கள் உண்மையான தன்மை தவிர எந்த உணர்ச்சியையும் அதிகப் படுத்தி காட்டாதீர்கள்.

4.   ஏழ்மை உங்கள் சொத்து. அதை சொகுசு வாழ்க்கைக்கு எக்காலத்திலும் பரிவர்த்தனை செய்து விடாதீர்கள்

5.   முட்டாளாகத் தோன்றும் ஒருவன் முட்டாளாக இல்லாமல் இருக்கலாம்தனது ஞானத்தை தனக்குள் கவனமாக பாதுகாத்துக் கொண்டிருக்கலாம்.

6.       ஞானம் என்பது சுய கட்டுப்பாட்டினால் தானாக வருவதுஏதோ வானத்தில் இருந்து உங்கள் கைகளில் வந்து விழுவதில்லை.

7.       பண்பே ஞானம் அடைவதின் முதல் படி. உங்களை நீங்களே அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு முன் அவர்களே உங்களைப் பற்றி தெரிந்து கொள்ளட்டும்.

8.       ஒரு மேலான இதயம் தன்னை எப்போதும் முன்னிறுத்துவதில்லை.அதன் வார்த்தைகள் அடிக்கடி வருவதில்லை. நவரத்தினங்களைக் காட்டிலும் அவை மதிப்பு மிக்கவை.

9.      ஒரு சிறந்த ஜென் துறவிக்கு எல்லா நாட்களும் அதிர்ஷ்ட நாட்களே. காலத்தை அவன் கடந்து செல்ல விடுவதில்லை. அதனுடனேயே நடக்கிறான்.புகழோ இழிவோ அவனை அசைக்க முடிவதில்லை.

10.  திருத்து. உன்னை மட்டும். அடுத்தவர்களை அல்ல. சரியையும், தவறையும் எக்காலத்திலும் விவாதிக்காதே.

11.  சில சரியான விஷயங்கள் பல தலைமுறைகளாக தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நூறாண்டுகளுக்குப் பின்னர் கூட ஒரு விஷயத்தின் சரியான கோணம் புரிந்து கொள்ளப்படும். எனவே தற்காலிகமாக நீ அதைத் தூக்கி நிறுத்தத் தேவையில்லை.

12.  காரணத்தோடு வாழுங்கள். பலன்களைப் பற்றி கவலைப்படாதீர்கள்.அதை இந்த பேரண்டம் கவனித்துக் கொள்ளும். ஒவ்வொரு நாளையும் சமாதானமான முறையில் வழிநடத்துங்கள்.

No comments:

Post a Comment