" Inner Peace creates Outer Peace" "அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம் . அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்."

29/06/2012



                                page4



அதற்கு கடவுளின் அனுமதி இருக்கிறது என்று தான் பொருள். நீங்கள் அதை கண்டனம் செய்தால் கடவுளின் விருப்பத்தை, கடவுளின் பேரறிவை,கடவுளின் தீர்ப்பை நீங்கள் விமர்சிக்கின்றீர்கள் என்று தானே அர்த்தம். அதைச் செய்யாதீர்கள். உங்களுக்கு அமைதி கிட்டும்.

நம் விருப்பமா உலகை இயக்குகிறது?

கடவுள் பொருள்களை முழுமையாகப் பார்க்கிறார்.மனிதன் பொருள்களை பகுதியாக பார்க்கிறான். மனிதனோ கடந்த காலம் மற்றும் எதிர்காலத்திலிருந்து  பிரிந்து நிகழ்ச்சிகளை நிகழ் காலத்தில் மட்டுமே பார்க்கிறான் கடவுளுக்கோ முன் நடந்ததும், பின் நடக்க வேண்டுவதும் தெரியும். அதனால்தான் கடவுள் ஒற்றுமையைக் காண்கிறார். மனிதன் வேற்றுமையைக் காண்கிறான். கடவுள் பூரணமாக நியாத்தைக் காணும் அதே தருணத்தில் மனிதனோ அதை காண்பதில்லை. நீங்கள் உங்களை கடவுளின் ஸ்தானத்தில் வைத்துப் பாருங்கள். நீங்களே கடவுள் என உணருங்கள்.  பிரபஞ்சம் முழுவதும் உங்களது படைப்பே என்றும் அனைத்தும் உங்கள் விருப்பத்தாலேயே நிகழ்கின்றன என்றும் உணருங்கள். உடனேயே உங்களுக்குள் அபரிமிதமான அமைதியும், ஆற்றலும் ஊற்றெடுப்பதை நீங்கள் உணர்வீர்கள்.



பிறர் நம்மைத் திட்டும்போது...

பிறர் உங்களை காரணமின்றி திட்டுவதாகவும், காரணமின்றி துன்புறுத்துவதாகவும் நீங்கள் கூறுகின்றீர்கள். அது உண்மையாகவே இருந்தாலும் கூட அதற்காக அலட்டிக் கொள்ளாதீர்கள். நிலைமையைப் பொறுமையுடன் சமாளியுங்கள். இக்கட்டான நிலைமைகளைச் சமாளிப்பதில் அமைதி ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம் என்பதை நீங்கள் காண்பீர்கள். யாராவது உங்களைத் திட்டினால் கண்களை மூடிக் கொண்டு பொறுமையாக இருங்கள். பிறர் அவர்கள் விருப்பம் போல் நினைக்கட்டும்.அவர்கள் விரும்புவதைச் சொல்லட்டும்



No comments:

Post a Comment