" Inner Peace creates Outer Peace" "அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம் . அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்."

29/06/2012



                                page5


இந்த உலகம் முட்டாள்கள் நிறைந்தது. நீங்கள் அறிவுடையவராக விளங்குங்கள்.

எல்லோர் முன்னிலையிலும் பணிவுடன் இருங்கள். எந்த நிலைமையிலும் அடக்கமாக இருங்கள். நான் உயர்ந்தவன் அல்லது தாழ்ந்தவன் என்ற எண்ணத்தை விடுத்து அனைவரிடமும், அனைத்திடத்தும் கடவுளைக் காணக் கற்றுக் கொண்டால் தான் இது சாத்தியமாகும். கடவுள் அப்படி விரும்புகிறார். எனவே அது அப்படி இருக்கட்டும். பிறர் உங்களை நிந்திக்கையில் நீங்கள் மௌனமாக இருங்கள். கலக்கம் அடையாதீர்கள். பழிச் சொற்களை ஏற்றுக் கொண்டால் அடக்கத்திலும், தூய்மையிலும் நீங்கள் வளர்ச்சி அடைவீர்கள். அதுவே ஒரு தவம். ஆன்மீகதில் நீங்கள் உயர்வடைவீர்கள்.

பகைமை - எடுத்தாரை சுடும் நெருப்பு

உங்களை திட்டுபவர் அல்லது துன்புறுத்துபவர் மீது உங்கள் இதயத்தில் எந்த விதமான பகைமை உணர்ச்சியையும்  கொள்ளாதீர்கள். வெளிப்படையாக கோபத்தை காட்டுவதை விட இது மிகவும் மோசமானது. இது மானசீகப் புற்று நோய். பகைமையை வளர்க்காதீர்கள். மறவுங்கள். மன்னியுங்கள். இது ஏதோ ஒரு வெறும் லட்சியவாத பழமொழி அல்ல. உங்கள் அமைதியை பாதுகாக்க ஒரே வழி இது தான். உள்ளே பகைமை வளர்ப்பது என்பது ஒருவனுக்கு மிகுந்த கெடுதியைச் செய்யும். உங்களுக்கு தூக்கம் போய் விடும். உங்கள் இரத்தத்தை நீங்கள் நஞ்சாக்குகின்றீர்கள். இரத்தக் கொதிப்பும், படபடப்பும் உங்களிடம் அதிகரிக்கும். பழிச் சொல்லோ, அவதூறோ உங்களுக்கு கடந்த காலத்தில் எப்பொழுதோ செய்யப்பட்டது. அது முடிந்த போன விசயம். சிந்திய பால் அது. அதையே மீண்டும் மீண்டும் நினைத்து அந்த அவதூறு அல்லது பழி சொல்லின் துன்பத்தை ஏன் நீங்கள் நீட்டிக்கிறீர்கள்? பகைமை மற்றும் வெறுப்பு எனும் ஆறுகின்ற காயத்தை நீங்கள் குத்தி குத்தி மீண்டும் ஏன் புண்ணாக்குகிறீர்கள்? இது மிகவும் முட்டாள்தனம் இல்லையா?. இந்தச் சிறிய விசயங்களில் நேரத்தையும். வாழ்க்கையையும் வீணடிப்பது என்பது தகாத ஒன்று. ஏனேனில் மனிதனின் வாழ்வு மிகவும் சுருங்கியது. இன்றிருப்போர் நாளை இல்லை. இந்த தீய வழக்கத்தை விடுங்கள். உங்களுக்கு விருப்பமான வேலை ஒன்றில் பூரணமாக மனத்தை லயிக்கச் செய்வதே நீங்கள் செய்ய வேண்டிய சிறந்த காரியமாகும்.

உங்களுக்குப் பிடித்தமான வேலை அல்லது பொழுதுபோக்கில் நீங்கள் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்களானால் உங்களுக்கு மிகுந்த மன அமைதி கிட்டும். அப்பொழுது ஒன்றைப் பெற்றொம் ஒன்றைச் செய்தோம் என்ற மனதிருப்தி உங்களுக்கு கிட்டும். மனிதன் வெறும் உணவால் மட்டுமே வாழ முடியாது. பணத்தைக் காட்டிலும் மன அமைதியே பெரிது என நீங்கள் எண்ணினால் அதிக வருமானத்துடன் கூடிய, ஆனால் நீங்கள் விரும்பாத ஒரு வேலையை விட, குறைவான வருமானத்துடன் கூடிய மன அமைதி தரும் ஒரு வேலையை நீங்கள் மனமுவந்து ஏற்பீர்கள்.


No comments:

Post a Comment