" Inner Peace creates Outer Peace" "அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம் . அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்."

29/06/2012


                                page6

புகழ் மனிதனுக்கு தேவையா?

உலகப் புகழ்ப் பெருமையை விரும்பாதீர்கள். மானசீக மற்றும் பௌதீக அமைதியின்மைக்கு இது தான் முக்கிய காரணமாகும். பிறர் உங்களை மதிக்க வேண்டும் என ஏன் நீங்கள் விரும்புகிறீர்கள்? அந்த மற்றவர் பெரும்பாலும் முட்டாள் ஜனங்களே. இந்த உலகில் பெரும் வெற்றி அடைந்த மஹா புருஷர்கள் பிறரின் அங்கீகரிப்பை, சமூக மரியாதையை எதிர்பார்த்தவர்களல்ல என்பதை நினைவில் வையுங்கள். 

மற்றவர்களது மதிப்பிற்காக நாம் ஏன் இவ்வளவு தூரம் அலட்டிக் கொள்ளவேண்டும்? அதற்குப் பதிலாக கடவுளது ஆசீர்வாதத்திற்காக, ஞானம் மிக்க மகான்களது ஆசிகளுக்காக நாட்டம் கொள்ளுங்கள். இதுவே செய்யத் தகுந்தது. முயல வேண்டியது.
பொதுமக்கள் கருத்துக்கு எவ்வளவு மதிப்பு?

பொது மக்களின் கருத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்காதீர்கள். பெரும்பாலும் பொது மக்களின் கருத்து தவறாக உள்ளது. ஒழுக்க நியதிகள், நன்னெறிகள், மறை நூல் வாக்கியங்கள், அறிஞர்கள் மற்றும் மகான்களது கருத்துக்கலுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நீங்கள் வாழ்வில் தவறவே மாட்டீர்கள்.

No comments:

Post a Comment