" Inner Peace creates Outer Peace" "அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம் . அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்."

29/06/2012



                                page8

பொறுமை தரும் பலம்

எது நடந்தாலும் அதைப் பொறுத்துக்கொள்ளுங்கள். எதைக் குணப்படுத்த முடியாதோ அதைப் பொறுத்தேயாக வேண்டும். மகிழ்ச்சியுடன் பொறுத்துக்கொள்ளுங்கள். காலை முதல் நடு இரவு வரை நூற்றுக்கணக்கான வசதிக் குறைவுகள், தொல்லைகள் மற்றும் துன்பங்களுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள். பொறுமை, உள்பலம் மற்றும் இச்சாசக்தி உங்களிடம் அதிகரிக்கும். பிரதிகூலமானதை அனுகூலமானதாக நீங்கள் மாற்றி அமைப்பீர்கள்.

ஒருவரது அடிப்படைத் தேவைகளுக்குக்கூட மற்றவரை அண்டி இருப்பதுதான் ஒருவரது அமைதியை இழப்பதற்கான முக்கியமான காரணமாகும். "பராதீனம் ப்ராண சங்கடம்". பிறரை அண்டி இருப்பது என்பது துன்பம் தருவதுதான். சுதந்திரம் ஆனந்தம் அளிக்கும். எனவே தன் காலில் நிற்க முயலுங்கள். முடிந்த மட்டும் முயலுங்கள்.

மனப்பூர்வமாக முயன்றால் பல்வேறு துறைகளில் உங்களால் தன் காலில் நிற்க முடியும் என்பதை நீங்கள் கண்டுகொள்வீர்கள். உங்கள் உடைகளை நீங்களே துவைத்துக் கொள்ளுங்கள். உங்கள் அறையை நீங்களே சுத்தம் செய்து கொள்ளுங்கள். உங்கள் உணவை நீங்களே சமைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கடிதங்களை நீங்களே டைப் அடித்துக்கொள்ளுங்கள். இவற்றை நீங்கள் தினமும் செய்துதான் ஆகவேண்டும் என்பதில்லை. தீராது என்ற நிலையில் இந்தச் சிறிய திறமைகள் உங்களுக்குப் பெரும் உதவியாக அமையும்.

No comments:

Post a Comment