" Inner Peace creates Outer Peace" "அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம் . அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்."

29/06/2012


                                page9

பொறுப்புகளை என்ன செய்வது?

பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காதீர்கள், தப்பி ஒடப் பார்க்காதீர்கள். அப்படிச் செய்தால் உங்களுக்கு மன அமைதி கிட்டாது. அதிகமான கவலைகள்தான் உங்களைச் சேரும். ஏனெனில் உங்களது கடமைகளை நீங்கள் தட்டிக் கழிக்கப் பார்க்கிறீர்கள் என்ற எண்ணமே உங்கள் மனதை அரித்து ஏற்கனவே உங்களிடம் இருந்த கொஞ்சம் அமைதியையும் இல்லாதாக்கிவிடும். இதைவிட உங்களால் முடிந்த மட்டும் திறமையுடன் உங்களது பொறுப்புக்களை நிறைவேற்றப் பாருங்கள். ஆனால், ஒன்றை முக்கியமாக இங்கே மனதில் கொள்ளவேண்டும். 'நான் செய்கிறேன்' என்ற ஆணவத்துடன் தினமும் மேலும் மேலும் புதிய பொறுப்புக்களைக் கூட்டிக்கொண்டு போகக் கூடாது. சாதாரண நடைமுறை பாஷையில் இதுதான் 'வம்பை விலைக்கு வாங்குவது' எனப் பொருள்படும். இதற்கு மாறாக உங்களது பொறுப்புக்களுக்கேற்ப உங்கள் புறவேலைகளை மென்மேலும் குறைத்துக்கொள்ளுங்கள். அதிக நேரத்தை பிரார்த்தனை,சிந்தனை மற்றும் தியானத்தில்செலவிட விருப்பம் கொள்ளுங்கள். மனமே இல்லாதாகும் பொழுதுதான் பூரண திருப்தி கிட்டுகிறது.மனம் என்பது எண்ணங்களின் குவியலே. எண்ணங்கள் என்றால் சலனம். செயல் குறையக்குறைய எண்ணங்களும் குறையும். எவ்வளவுக்கெவ்வளவு எண்ணங்கள் குறைகின்றனவோ அந்த அளவு மன அமைதி அதிகரிக்கும். எண்ணமின்மைதான் பூரண அமைதி நிலவும் மிக உயர்ந்த நிலையாகும்.
http://vasantruban.blogspot.com/

No comments:

Post a Comment