" Inner Peace creates Outer Peace" "அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம் . அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்."

02/07/2012

                 page11
               மன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை

தோல்வி என்பது தோல்வி அல்ல!

செயல்களைச் செய்வதானது தன்னம்பிக்கையை அளிக்கும். ஆரம்பத்தில் நீங்கள் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை. உங்கள் குறைகளைத் திருத்திகொண்டு அடுத்த முறை நீங்கள் வெற்றி அடையலாம். நாற்காலியில் அமர்ந்து கொண்டு கவலைப்படுவதால் எதுவும் நிகழப்போவதிலை. அது உங்களை ஒரு நம்பிக்கை அற்றவராக ஆக்கிவிடும்.

சிலர் சில நல்ல காரியங்களைச் செய்யத் தொடங்கும் போதே மன உறுதி குலைந்து நம்பிக்கையை இழக்கின்றனர். அதனால் விக்கினங்கள் உண்டாகின்றன. எந்த நல்ல காரியம் செய்யும்பொழுதும் விக்கினங்கள் ஏற்படுவது இயற்கையே. காரியம் செய்பவருடைய மன உறுதியைச் சோதிப்பதற்காகவே அவை வருகின்றன. 

அவரது நம்பிக்கை, உறுதி மற்றும் மனத் தூய்மையை சோதிக்கவே அவை வருகின்றன. ஏதாவது உருப்படியாகச் செய்யவேண்டும் என்று உங்களது உறுதி அதிகரிக்கின்ற அளவு எதிரிடை சக்திகளும் பலமடையும். அதைக்கண்டு மனம் தளர வேண்டாம். அதற்கு மசிய வேண்டாம்.

கடவுளிடமும் மற்றும் உங்களிடமும் நம்பிக்கை கொண்டு அந்த இடுக்கண்களை வெல்லுங்கள். சோதனைகளையும் இடுக்கண்களையும் எதிர் கொள்ளாமல் எந்தத் துறையிலும் உங்களால் வெற்றியை அடைய முடியாது. தகுதித் தேர்வு எழுத விருப்பம் இல்லாமல் பட்டம் பெற விழைவது நியாயமாகாது அல்லவா?


No comments:

Post a Comment