" Inner Peace creates Outer Peace" "அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம் . அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்."

02/07/2012



                                page12
               மன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை

இடுக்கண்களை சந்திப்பது இன்பமே

இடுக்கண்களை எதிர்கொள்ள நீங்கள் தயங்கினால் உங்களால் வாழ்க்கையில் எதையுமே சாதிக்கமுடியாது. ஏதோ காலத்தைக் கழிக்கலாமே தவிர, அது வாழ்வாகாது. உண்மையாக வாழ்வது என்றால், அது இலட்சியம் உடையதாயிருக்கவேண்டும். அடைவதற்கான லட்சியங்கள், முயல்வதற்கான குறிகோள்கள் இருத்தல் வேண்டும்.எதிர்ப்பை சமாளிக்காமல் இலட்சியங்களை அடைய முடியது. இத்தகைய எதிர்ப்புகள் உங்களது மன அமைதியைக் குலைக்கக்கூடாது. மாறாக வாழ்க்கைப் போராட்டத்தை வீரத்துடன் எதிர்கொள்ள அது உங்களுக்கு ஆற்றலை அளிக்க வேண்டும். நடைமுறை வாழ்வில் இத்தகைய எதிர்ப்புச் சக்திகளை தவிர்க்க முடியாத தீங்கு என்று ஏற்றுக்கொண்டு அவற்றை அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக பார்க்க நீங்கள் கற்றுக்கொள்ளவேன்டும்.

நினைவிருக்கட்டும், நிகழ்ச்சிகள் முன்பே நிச்சயிக்கப்பட்டவை!

எதற்கும் வருத்தப்பட வேண்டாம். உஙகளுடைய கடந்த கால அனுபவங்களிலிருந்து நீங்கள் பாடங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். அந்தப் பாடங்களை அடிக்கடி நினைத்துப் பாருங்கள். அந்தப் பாடங்கள் உங்கள் எதிர்கலச் செயல்களுக்கு வழிகாட்டியாக அமையட்டும். ஆனால் கடந்த காலத்தைப் பற்றிய கவலையில் மூழ்காதீர்கள். நான் அப்படிச் செய்திருந்தால் இப்படி ஆகியிருப்பேன், இப்படிச் செய்திருந்தால்... என்று எண்ணுவதெல்லாம் வீணான சிந்தனையாகும். நேரம் வீண். சக்தி வீண். ஏனெனில் கவலை சக்தியை கரைத்து விடுகிறது. வேறு எதுவும் அது செய்வதில்லை.

உண்மை எதுவெனில், எது நடந்ததோ அது அப்படித்தான் நடக்கவேண்டும் என்பது ஆண்டவனின் திட்டம். அதற்கு மாறாக அது நடந்திருக்கமுடியாது. ஒரு சிறு துகளின் அசைவு முதல் பிரபஞ்சத்தின் பிரம்மாண்டமான இயக்கம் வரை, கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர் காலத்தில் ஒவ்வொரு நிகழ்ச்சியும் எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த எங்கும் நிறைந்த பரம்பொருளின் அருளால் இப்படித்தான் நிகழவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. நிகழ்ச்சிகள் எவ்வாறு நிகழவேண்டும் என்று விதிக்கப்படிருக்கின்றனவோ அவ்வாறு  நிகழ்கின்றன. அவன் கணக்குப்படியே அனைத்தும் நிகழும். கடவுளின் விருப்பத்தை மாற்ற எந்த மனிதனாலும் இயலாது. நிகழ்வது நிகழ்ந்தே தீரும் என்பது பிரபஞ்சமெங்கும் உள்ள ஒரு உண்மையாகும். கவலைப்படுவது, வருந்துவது என்பது உங்கள் கோழைத்தனத்தை வெளிப்படுத்தி, ஒன்றுமில்லாத ஒன்றுக்காக உங்கள் மன அமைதியைக் குலைத்துக் கொள்வதைக் குறிக்கும். ஒவ்வொரு நிகழ்விலும் இறைவனின் திருஅருள் இலங்குகிறது என்பதைக் கண்டு உணர்ந்து, உங்களுக்குள்ளும் உலகத்துடனும் அமைதியாக வாழ்வதே அறிவுடைமை ஆகும்.


No comments:

Post a Comment