" Inner Peace creates Outer Peace" "அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம் . அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்."

02/07/2012



                                page13
               மன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை



சுய நலம் அமைதியைப் பெறுவதில்லை

நீங்கள் முழுக்கவும் சுயநலவாதியா அல்லது சில சமயங்களிலாவது நீங்கள் பிறரைப் பற்றி நினைக்கிறீர்களா? சுயநலவாதிக்கு அமைதியே கிட்டாது. மாறாக, நீங்கள் சுயநலமற்று இருந்தால் எந்தவிதப் பிரதிபலனும் எதிர்நோக்காமல் செயல்பட்டால் உடனேயே நீங்கள் பேரமைதியை அனுபவிப்பீர்கள். பிரதிபலன் எதிர்பார்க்காத தொண்டு தூய மகிழ்ச்சியை அளிக்கிறது. பிறரை சந்தோஷப் படுத்துங்கள், அவர்களது மகிழ்ச்சியில் நீங்கள் ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள். இது அனைவராலும் அனுபவிக்கக்கூடியதொன்றகும். சிறியதோ பெரியதோ உங்களால் முடிந்தமட்டும் பிறருக்குத் தொண்டு புரியுங்கள். ஆனால் பிரதிபலனையோ நன்றியையோ எதிர்பார்க்கக்கூடாது.

தொண்டிற்காகவே தொண்டு செய்யப்பட வேன்டும்.

எப்பொழுதெல்லாம் வாய்ப்பு கிட்டுகிறதோ அப்பொழுதெல்லாம் தொண்டு செய்யப்பட வேண்டும்.

சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி இது:
ஒரு பெரிய நகரம். மாலை வேளை. இருள் சூழும் நேரம். நான் மாலை உலாவலுக்குச் சென்றிருந்தேன்.

அமைதியான தனி இடத்தில் ஒரு பெண் என்னிடம் வந்து, பாயி ஸாஹேப், டர் லக்தா ஹை ( சகோதரா, எனக்குப் பயமாயிருக்கிறது ) என்றாள். வினாடிப்பொழுதில் நான் அவள் நிலைமையை உனர்ந்து கொண்டேன். அந்தத் தனி இடத்தில் ஒரு ரிக்ஷாக்காரன் அவளைப் பின் தொடர்ந்து வந்திருக்கிறான். பயந்து போன அந்தப் பெண் எங்கு போவது என்று தெரியாமல் தன் வீட்டுக்குப் போகும் வழியைத் தவற விட்டு விட்டாள். நான் அவளுக்கு தைரியமூட்டினேன். சிறிது நேரத்தில் அவளது வீட்டை இருவருமாகச்சேர்ந்து தேடினோம். நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து அவளது வீடு ஒரு ஃபர்லாங் தூரத்தில் தான் இருந்தது என்பதையும் கண்டுபிடித்தோம். நான் அவளுக்குத் துணையாகச் சென்று அவளை அவளது வீட்டில் சேர்த்துவிட்டு என் வழியே நான் போனேன். ஒரு சிறிய உதவிதான். அதனால் எனக்குப் பெரிய நஷ்டமொன்றில்லை. ஆனால் அதனால் நான் பெற்ற மகிழ்ச்சியும் மன நிறைவும் எவ்வளவு! இப்பொழுது அதைப் பற்றி நினைத்தாலும் மனதில் அது அமைதியை அளிக்கிறது. எந்தவிதச் செலவு இல்லாமலே அல்லது மிகக் குறைந்த செலவிலோ ஒருவர் பிறருக்குப் பலவிதங்களிலும் உதவ முடியும். தேவை: ஒரு தூய்மையான இதயம் தான்.


No comments:

Post a Comment