" Inner Peace creates Outer Peace" "அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம் . அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்."

02/07/2012




                                page14

மன அமைதி பெற வழிகளும் நிறைய

வாழ்க்கையில் மன அமைதியை விரும்பும் ஒருவன் ஒவ்வொரு நிலையிலும், நிகழ்விலும் விவேகத்துடன் செயல் பட வேண்டும். எது சரி, எது தவறு, எது முடியும், எது முடியாது என்பதைப்பற்றி நமக்குத் தெளிவாக நம் முன்னோர்கள் நிறைய நூல்களில் சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள்.அவை கல்ப காலத்திற்கும் பொருந்துபவை. ஒரு குறிப்பிட்ட நிலைமையில் சான்றோர்கள் சொன்ன நெறிமுறை எது? மறைநூல்கள் கூறுவது என்ன? இந்த மாதிரி தருணங்களில் மகாத்மாக்கள் எப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள்? இப்படி ஒவ்வொரு நிலையிலும் நமது பார்வையை தெளிவு படுத்திக் கொள்ளலாம். சரியான பாதையைக் கண்டுபிடிக்க ஆத்ம சோதனை செய்வது மிக எளிது! மனம் போன போக்கெல்லாம் போய் புலன்கள் மற்றும் உணர்ச்சிகளின் வழியில் இயந்திரமயமாக செல்வது என்பது மாயை விரித்த வலையில் நேராக சென்று விழுவதேயாகும்.

எது இனிய வழி அதுவே நம் வழியாக இருக்கட்டும்
'பிரேயோ மார்க்கம் சிரேயோ மார்க்கம்' அதாவது இனிய வழி மற்றும் நல் வழி இரண்டினையும் எப்போதும் பகுத்துணருங்கள்.

உலகத்தவர் வழியில் செல்ல உங்கள் மனம் உங்களைத்தூண்டும் போதெல்லாம் நீங்கள் இதை மீண்டும் செய்யவேண்டும்.

பிறரைக் காப்பி அடிக்கவேண்டும் என்ற எண்ணம் மிகவும் சக்தி வாய்ந்தது. அது அறிஞ்சரையும் அடிமைப்படுத்தவல்லது. உங்கள் நண்பர்கள் எல்லோரும் ஸ்கூட்டரில் வருகிறார்கள் என்பதற்காக, ஸ்கூட்டருக்கான தேவை உங்களுக்கு இல்லாதபோது ஸ்கூட்டரை வாங்கத் தேவையான பணத்தைப் பற்றிக்கவலைப்படாதீர்கள். உங்கள் அக்கம் பக்கத்தவர் அவர்கள் வீட்டுப் பிள்ளைகளை கலீஃபோர்னியாவுக்கும், கேம்பிரிட்ஜுக்கும் அனுப்பியிருக்கிறார்கள் என்பதற்காக உங்கள் மகளை அமெரிக்காவிற்கு அனுப்புவது எப்படி என்பது பற்றி கவலைப்படாதீர்கள். எல்லாவிதத் தூண்டுதல் களிலிருந்தும் விலகியிருங்கள். தூண்டுதல்களை உண்டாக்கும் இடங்களுக்குச் செல்லாதீர்கள். பிறகு தூண்டுதல்களை தவிர்க்கப் போரட வேண்டியதிருக்கும். தேவை இல்லாமல் அது உங்கள் இச்சா சக்தியை வீணடிக்கும். தூன்டுதலைத் தடுப்பதில் நீங்கள் வெற்றி பெற்றாலும் அது உங்கள் மனதில் ஒரு ஆசையை விட்டுச் செல்லும். ஆசை அல்லது விருப்பமே மன சஞ்சலத்தைத் தூன்டுகிறது.

No comments:

Post a Comment