" Inner Peace creates Outer Peace" "அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம் . அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்."

02/07/2012


          page15

குறைந்த தேவைகள்--நிறைந்த வாழ்வு!
உங்கள் தேவைகளைப் பெருக்கிக்கொள்ளாதீர்கள்; பிறகு பிச்சைக்காரனைப் போல திரியாதீர்கள். உங்கள் தேவைகளைக் குறைத்துக்கொண்டு ராஜாவைப் போல வாழுங்கள், வீட்டில் உங்களுக்குத் தேவையான உடைகள் இருக்கும்பொழுது எதற்காக ஒரு துணிக்கடைக்குள் நுழைந்து பல்வேறு ரகங்களைக் காணவேண்டும்? பணமிருந்தால் தேவையற்றவற்றை வாங்குவீர்கள். இல்லாவிட்டால் ஓ, என்னிடம் இது இல்லையே! இதை நான் வாங்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும்? என்று எண்ணி மனம் வருந்துவீர்கள். மன அமைதியும், பொருள்களில் பேராசையும் ஒன்றுக்கொன்று முரணானவை. அவை இரண்டும் ஒத்துப் போகாது. உங்களுக்கு எது தேவையோ அதைத் தேர்ந்தெடுங்களேன். உங்கள் பொதுவான புறவேலைகளுக்கேற்ப தேவையானவற்றை மிகமிகக்குறைத்துகொள்ளுங்கள். ஆசைகளும் தேவைகளும் மிக மிகக் குறையும் போது மன அமைதி மிகவும் அதிகரிக்கும். உடமைகள் துன்பத்தை தருகின்றன. யோசித்தால் இந்த விஷயம் மிகவும் தெளிவானது. இதற்கு விளக்கமே தேவையில்லை. ஒரு காரை சொந்தமாக வைத்திருப்பதற்குப் பதில் ஒரு டாக்ஸியில் செல்லுங்கள். சொந்த வீட்டில் வசிப்பதற்கு பதிலாக வாடகை வீட்டில் வசிப்பது கௌரவக்குறைவல்ல. சிந்தித்துப் பார்த்தால் இந்த பூமியில் எந்த ஒரு அடி மண்ணும் எவருக்கும் நிரந்தரமான சொந்தமல்ல என்பது விளங்கும். ஒருவன் ஒரு வீட்டை வாங்கும்போது, 50, 60 ஆண்டுகளுக்கான மொத்த வாடகையைத் தருகிறான் என்றே பொருள். திருவருளின் சித்தமின்றி ஒரு துண்டு ரொட்டியைக்கூட ஒருவன் விற்கவும் முடியாது; வாங்கவும் முடியாது என்பதை உணருங்கள்.

வேண்டாததை நிறுத்துங்கள்

நல்லறிவு அல்லது ஞானம் இல்லாததால் நம்மில் பெரும்பாலோர் துன்புறுவதில்லை. மாறாக அந்த ஞானத்தை நமது அன்றாட வாழ்வில் கடைபிடிக்காததால்தான் நாம் அல்லலுறுகிறோம். உங்களக்கு மன அமைதி வேண்டுமென்றால் நீங்கள் செய்யக்கூடாது என்று எதையெல்லாம் உள்மனது சொல்கிறதோ, அந்த எல்லாக் காரியங்களையும் செய்யாமல் நிறுத்துங்கள்.
அதை போல நீங்கள் செய்யவேண்டும் என்று உள்மனது நினைக்கும் காரியங்களை உடனே செய்யத் தொடங்குவதும் அதைப் போல முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது உங்களை நன்னெறிப்படுத்தும். நல்ல பாதையில் நீங்கள் வந்து விட்டால் உங்கள் வாழ்வில் கடவுள் கிருபை வரத் தொடங்கி வாழ்வை மென்மேலும் புனிதமாக்கும். நீங்களும் மன அமைதி பெற்று உங்களைச் சுற்றிலும் அந்த அமைதியைப் பரப்புவீர்கள்.
பிறரிடம் நம்பிக்கை தேவை. எளியவரிடமும் அன்பு காட்டப்படவேண்டும். தன்னலமின்மையைக் கடைப்பிடிக்கவேண்டும். பணமோ, பொருளோ, ஒரு புன்னகயையோ கூட தானம் செய்யவேண்டும். வைராக்கியத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். பக்தியை வளர்க்கவேண்டும். இந்த குணங்களெல்லாம் திடீரென்று ஒரே நாளில் நம்மிடம் வந்து விடாது. உங்கள் வாழ்வின் ஒரு இயற்கையாக, பிரிக்கமுடியாது, முக்கிய அங்கமாக அவை ஆகவேண்டுமானால், தினமும் சிறிது சிறிதாக பயிற்சியை மேற்கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment