" Inner Peace creates Outer Peace" "அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம் . அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்."

02/07/2012


          page16


வினை விதைத்தால், தினையாகுமா?

நீங்கள் பிறரை வெறுத்தால், நீங்கள் பிறரைத் துன்புறுத்தினால், உங்கள் வேலைக்காரர்களை நீங்கள் திட்டினால், உங்கள் குழந்தைகளை நீங்கள் இம்சித்தால், வீட்டில் உங்கள் மனைவியையும் அலுவலகத்தில் உங்கள் கீழ் உள்ளவர்களையும் நீங்கள் மோசமாக நடத்தினால், வியாபாரத்தில் நீங்கள் மக்களை ஏமாற்றினால்-இவை போன்று இன்னும் பல செயல்களைச் செய்துவிட்டு, மன அமைதியையும், எதிர் பார்த்தால் நீங்கள் முடியாத ஒன்றை எதிர் பார்க்கிறீர்கள்.

அது மட்டுமல்ல. அதைப் பெற உங்களுக்குத் தகுதியும் கிடையாது. பிறரது மன அமதியைக் குலைக்கும் ஒருவனுக்கு தனது மன அமைதியைப் பெற விழைவதற்குத் தகுதி கிடையாது. எனவே நீங்கள் எப்படி செயல்படப் போகிறீர்கள்?

இப்படியான நிஜமான ஆன்மீக முன்னேற்றத்தால் மட்டுமே மன அமைதி ஏற்படுகின்றது. ஆன்மீக முன்னேற்றம் என்பது அகமுக மார்க்கம். ஆன்மீக வாழ்வு என்பது மனதை உள்முகமாக செலுத்தி நமக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் உள்ள சூக்கும தொடர்பை அறிவதே! இந்த அகமுக வளர்ச்சியானது புற ஆதரவுடன் பெரிதும் ஊக்குவிக்கப்படுகிறது. அதுபோல புற வாழ்வில் உள்ள ஒவ்வாதவைகளால் இது பெரிதும் சீரழிக்கப்படுகிறது.

எனவேதான் சாத்வீக உணவு, சாத்வீக உடை, சாத்வீக படிப்பு, சாத்வீக நட்பு சேர்க்கை, சாத்வீக சூழ்நிலை, சாத்வீக பழக்க வழக்கங்கள் தேவை என்று சொல்கிறர்கள். எனவேதான் பிரார்த்தனை, யாத்திரை, சத்சங்கம், விரதங்கள் மற்றும் மத விழாக்களை அவர்கள் வலியுருத்துகிறார்கள். இந்த சக்தி வாய்ந்த புற உதவிச் சாதனங்களை விட்டு விடாதீர்கள். மாறாக விரைவான முன்னேற்றத்திற்கு அவற்றை உறுதியாகக் கடைப்பிடியுங்கள். நீங்கள் நன்கு முன்னேறிவிட்டால் வெற்றுச் சடங்குகள் தாமாகவே கழன்றுவிடும். விதை முளைவிடத் தொடங்கிய பின்பு மூடியிருந்த உறை கழன்று விடும். ஆனால், முளைக்கும் முன்பு அதுவும் தேவைதானே?


No comments:

Post a Comment