" Inner Peace creates Outer Peace" "அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம் . அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்."

02/07/2012




                                page17


தற்கொலை எனும் மூடத்தனம்

நீங்கள் முற்றிலும் மனம் தளர்ந்து, நம்பிக்கை இழந்து இருக்கும்பொழுது, நமது மறைநூல்களின் பக்கம் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள். அல்லது மகான்களின் சிறந்த நூல்களைப் படியுங்கள், அல்லது ஒரு மாதம் விடுமுறை எடுத்துக் கொண்டு ஒரு யாத்திரையை மேற்கொள்ளுங்கள், அல்லது ஒரு புனித இடத்திற்கு விஜயம் செய்து அங்கே பதினைந்து நாட்களோ, அல்லது ஒரு மாதமோ தங்குங்கள். நேரத்தை பிரார்த்தனை, ஜபம், கீர்த்தனை, தியானம், நீண்ட நடை பயணங்களில் செலவிடுங்கள். சிதறுண்ட உங்கள் மனத்தையும் உடலையும் சீர்படுத்தி, உங்களிடம் புதிய தெம்பினையும், மகிழ்ச்சியினையும் ஏற்படுத்த இவையெல்லாம் சிறந்த வழிமுறைகளாகும்.

சிலர் மது அருந்துதல் மற்றும் தவறான வழிகளில் சென்று அம்முறைகளால் தங்களது கவலைகளை மறக்கலாம் என்று தப்புக்கணக்குப் போடுகின்றனர். அது முடியவே முடியாது. அவர்களது இந்த தீர்வு வியாதியைக் காட்டிலும் மிகவும் மோசமான மருந்தாகும். தூக்க மாத்திரைகள் பிரச்சினையைத் தீர்க்கமாட்டா. அவை உண்மை நிலையை உங்களால் எதிர்கொள்ள முடியாத அளவுக்கு உங்களிடம் மனத் தளர்ச்சியை உண்டாக்கும். தற்கொலையோ மகா முட்டாள்தனம்! நீங்கள் பிசாசாக மாறுவீர்கள். மனிதனாக இருக்கும் நிலையைக் காட்டிலும் அது அதிகம் தொல்லை நிறைந்தது.

No comments:

Post a Comment