" Inner Peace creates Outer Peace" "அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம் . அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்."

03/07/2012




                                page19


ஆன்மீக ஒப்பிடலும் லௌகீக ஒப்பிடலும்

லௌகீக அளவில் உங்களைவிட கீழான நிலையில் இருப்போருடனும், ஆன்மீக அளவில் உங்களைவிட மேல் நிலையில் உள்ளோருடனும் ஒப்புநோக்குங்கள். இது உங்களிடம் லௌகீக திருப்தியையும், ஆன்மீக அதிருப்தியையும் தூண்டும். அதில்தான் முன்னேற்றமும் அமைதியும் அடங்கியுள்ளது. ஆனால், இதற்கு மாறாக ஆன்மீகத்தில் கீழ்நிலையில் உள்ளோருடனும், லௌகீக நிலையில் மேலான நிலையில் உள்ளோருடனும் நீங்கள் உங்களை ஒப்பு நோக்கினால் ( அநேகர் இப்படித்தான் செய்கின்றனர் ) அது பயங்கர விளைவுகளாக லௌகீக அதிருப்தியையும் ஆன்மீக கர்வத்தையும் கொணரும். மன உளைச்சல் நரகத்திற்கு இதுதான் நேர்வழி.

யாருடன் நட்பு?

ஒரு சில நம்பகமான நண்பர்களிடம் மட்டுமே பழகுங்கள். பழக்கத்தப் பெருக்கவேண்டாம். எவருடனும் அதிகமாக நெருங்கிப் பழக வேண்டாம். அதிக நெருக்கம் அலட்சியத்தை உருவாக்கி உணர்ச்சிகளை உருக்குலைத்து, மன அமைதியைக் கெடுக்கிறது.
காரணத்துடன் மட்டும் பேசுங்கள். எல்லவிதமான தேவையற்ற பேச்சையும் தவிருங்கள். அளந்தே பேசுங்கள். களங்கமற்ற, நல் நோக்கம் கொண்ட வார்த்தைகளே சில வேளைகளில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, பிரிவை உண்டாக்குகின்றது. எதிலும் எவருக்கும் புத்திமதி சொல்லப் போகாதீர்கள். நீங்கள் கேட்கப்பட்டாலன்றி , நாம் நமது வேலையைப் பார்ப்போம்.

வேண்டாம் விவாதம்

விவாதம் செய்யாதீர்கள். ஒரு பொழுதும் தர்க்கத்தில் ஈடுபடாதீர்கள். விவாததில் வெற்றி பெறவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? அது உங்களுக்கு எந்தவிதமான உருப்படியன விளைவுகளையும் தராது. அது உங்கள் ஆணவத்தைப் பெருக்கும். மற்றவரைப் புண்படுத்தும். நண்பர்களுக்கிடையே பிளவை உண்டாக்கும்.

அடுத்த நபர் அவரது கொள்கையில் நிற்கட்டும். திருத்தவே முடியாத மகா முட்டாள்களும், நியாயத்தைப் பார்க்க வைக்கமுடியாத பரம மூடர்களும் இந்த உலகில் உள்ளனர். உங்களது காலத்தையும், பிராணனையும் அவர்கள் விஷயத்தில் வீணாக்காதீர்கள். சோர்வுதான் உங்களுக்கு மிஞ்சும், பகைமையும் வளரும். நமக்கு இது வேண்டுமா?


No comments:

Post a Comment