" Inner Peace creates Outer Peace" "அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம் . அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்."

03/07/2012




                                page20



எதிர்பார்ப்பு ஏமாற்றமானால்...

எதையும் எதிர்பர்க்காதீர்கள். ஏனெனில் எதிர்பார்ப்பு பரபரப்பையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது. அன்றாடம் தபால்காரரை நீங்கள் எதிர்பார்த்து நிற்கிறீர்கள். கடைசியில் உங்கள் நண்பரிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் அந்தக் கடிதத்தை அவர் கொண்டு வருவதில்லை. உங்கள் கலக்கத்திற்கு எல்லையே இல்லை. எதற்காக இந்த மன உளைச்சல்? எதிர்பார்ப்பு இல்லையேல் ஏமாற்றமும் இல்லை. நீங்கள் எதை அனுபவிக்க வேண்டும் அல்லது எதில் துன்பப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறதோ அதை அனுபவித்து, அதில் துன்பப்பட்டே ஆக வேண்டும்.

உங்கள் துன்பம் அல்லது இன்பத்தின் அளவைக் கூடவோ அல்லது குறைக்கவோ எவராலும் முடியாது.

இதை அறிந்த பின்னும் நீங்கள் ஏன் உங்கள் காலத்தையும், சக்தியையும் கவலையில் அழிக்கவேண்டும். கடந்த காலத்தை மறவுங்கள். எதிர்காலத்தைப்பற்றி எண்ணவேண்டியதில்லை. நிகழ்காலத்தில் வாழுங்கள். உங்கள் முழுத் திறமையையும் பயன்படுத்தி உங்களது பொறுப்புக்களை உங்கள் முன் அவை எவ்வாறு தோன்றுகின்றனவோ அவ்விதமே நிறைவேற்றுங்கள். பலன்களைக் கவனிக்க கடவுள் ஒருவர் இருக்கிறார். நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

கவலைப்படுவதின் பலன் என்ன?

"எனக்கு என்ன நேரிடுகிறது என்பதை பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால், பிறரைப் பற்றித்தான் எனக்குக் கவலை" என்று சிலர் சொல்லுவர். இது இன்னொரு வித அறியாமையாகும். இவ்வாறு சொல்பவர்கள் தங்களைத் தாங்களே ஏமற்றிக்கொள்கிறார்கள். உங்கள் மகனின் பைத்தியக்காரத்தனம் பற்றியோ அல்லது உங்கள் மகள் வேறு ஒருவனுடன் ஓடிவிட்டாள் என்பது பற்றியோ நீங்கள் கவலைப்படாதீர்கள்.

எல்லாவிதத்திலும் வாழ்வின் துக்கங்களைக் குறைப்பதற்கு உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள். ஆனால், துளிக்கூட கவலைப்படாதீர்கள். ஒவ்வொறு தனி மனிதனும் அவனவனுடைய பூர்வஜென்ம வினையினால் ஆளப்படுகிறார்கள். (உலகின் எல்லா பகுத்தறிவுவாதிகளும் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்). ஒருவனது தலைவிதியை கொஞ்சங்கூட மாற்ற எவராலும் முடியாது. 'அ' 'கே' வுக்கு உதவியோ தொல்லையோ கொடுக்கும்போது 'அ' மூலம் கடவுள்தான் செயல்படுகிறார். 'அ' செயல் படுவதில்லை. (அது 'கே' வின் பூர்வ ஜெம வினை). ஒரு முறை இதை நீங்கள் புரிந்து கொண்டால் மற்றவர்களைப் பற்றியோ அல்லது உங்களைப் பற்றியோ கவலைப்பட மாற்றீர்கள். கவலை சக்தியை உறிஞ்சி நேரத்தை வீணாக்குகிறது. அது மூடத்தனம்.கவலைப்படுபவன் ஆன்மீக விதிகளைப் பற்றிய அறியாமையை வெளிப்படுத்துகிறான்.

No comments:

Post a Comment