" Inner Peace creates Outer Peace" "அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம் . அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்."

03/07/2012




                                page21


உதவிக்கு யாரை அழைப்பது?

உங்களைப்பற்றி எவருமே நாட்டம் கொள்வதில்லை-இந்த விஷயத்தை நன்கு நினைவில் கொள்ளுங்கள். உங்களது ஒவ்வொரு மோசமான நிலைமையிலும் உங்களது உதவிக்கு உலகம் ஓடிவரும் என்று எதிர் பார்க்காதீர்கள். கடவுளிடம் நம்பிக்கை கொண்டு தொடர்ந்து முயற்சியில் ஈடுபடுங்கள். உங்களுக்கு கடவுள் துணை இருந்தால் உலகமெல்லாம் எதிர்த்தாலும் நீங்கள் வெற்றி அடைவீர்கள். ஆனால், நீங்கள் கடவுளை இழந்து உலகின் உதவியை எல்லாம் பெற்றாலும் நீங்கள் தோல்வியே அடைவீர்கள். கடவுளின் நட்பைப் பெறுங்கள். அதுவே மிகச் சிறந்த செல்வம். அதைப் பெற்றுவிட்டால் மன அமைதி உங்களுடையதே. அப்பொழுதே உங்களிடம் அனைத்தும் இருக்கிறது. பயம் ஓடிவிட்டது. பரபரப்பு மறைந்துவிட்டது.

அனைத்திலும் ஆண்டவனைக் காணுங்கள். அனைவரிடமும் அனைத்திடத்தும் ஆன்மீக அளவில் ஒருமைப்பாட்டை உணருங்கள்.

படைப்பில் மற்றவரிடமிருந்து நீங்கள் வேறல்ல. உங்களிடம் உள்ள அதிசயமான வாழ்க்கை தத்துவத்தின் மற்றொரு பெயரே கடவுள். அதை வாழ்க்கை என்று அழைத்தாலும், உணர்வு என்று அழைத்தாலும், இருப்பு என்று அழைத்தாலும் இந்த அதிசய தத்துவம் எங்கும் நிறைந்தது, என்றும் உள்ளது. காரண காரியம் அற்றது. மகிழ்ச்சியாயிருங்கள். உங்களிடம் நிலவும் கடவுளுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் சிந்தியுங்கள்,பேசுங்கள், நடவுங்கள். கீழ்மகன் ஒருவனின் இலக்கணங்களான கயமை, இழிகுணம், ஏமாற்றுத்தனம், சுயநலம் ஆகியவற்றை ஒதுக்குங்கள். அனைவருடனும் ஆன்மநேய ஒருமைப்பாட்டை உணருங்கள். நேரிய பாதையில் உங்கள் வாழ்க்கை செல்லத் தொடங்கும். உங்கள் ஆன்மீக முன்னேற்றம் விரைவாயிருக்கும். நீங்கள் விரும்பும் அனைத்து மன அமைதியும் உங்களிடம் நிலவும்.

பிரார்த்தனை முக்கியம்

தினமும் காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது இரண்டு நிமிடம் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். உங்களைப் படைத்தவருக்காக இந்த நேரத்தை நீங்கள் ஒதுக்கலாம் இல்லையா! "இறைவா, இன்று உமது விருப்பத்தை நிறைவேற்ற எவ்விதம் நீர் விரும்புகிறீரோ அவ்விதம் என்னைப் பயன்படுதுவீராக. நான் என்னை ஒன்றுமில்லாதவனாக ஆக்கி உங்கள் பொறுப்பில் என்னை முழுக்கவும் விட்டுவிடுகிறேன்".
பல வருடங்களுக்கு முன் அகில இந்திய வானொலியில் நான் ஒரு பாடலைக் கேட்டேன். அதில் ஒரு வரி என்றும் என் நினைவில் இருக்கிறது. அனைவரும் அதை படுக்கையிலிருந்து எழுந்திருக்கும் முன் உச்சரிக்கலாம். "ஆஜ் மேரி கதிதும்ஹாரி ஆரதி பன்ஞாய்" ( இன்று என் வாழ்க்கை உமக்கு நான் செய்யும் ஆரத்தியாக அமையட்டும்).இதை நீங்கள் சொன்னால், நாள் முழுவதும் உங்கள் பிரார்த்தனையை நினைவு கூர்ந்தால் தவறான செயல் செய்வதற்கு முன்னும், தடு மாறி விழும் முன்னும் நீங்கள் ஒரு முறைக்கு இருமுறை சிந்திப்பீர்கள். அன்றைய தினத்தின் முடிவில் பகவானுக்கு நீங்கள் செலுத்தும்( நற்செயல்கள்) மாலையில் அதிகமதிகம் பூக்கள் அமையும் விதத்தில் அதிகம் நல்ல செயல்களால் அன்றைய தினத்தை நிரப்புவீர்கள்.

No comments:

Post a Comment