" Inner Peace creates Outer Peace" "அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம் . அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்."

03/07/2012




                                page22


சிரித்தலும் அழுதலும் இன்றி...

வாழ்க்கையில் நேரிடும் ஒவ்வொரு அனுபவத்தையும் அதும் வரும் விதத்திலேயே ஏற்றுக்கொளுங்கள். முணுமுணுக்காதீர்கள், எரிச்சல் கொள்ளாதீர்கள், வருந்தாதீர்கள். மகிழ்ச்சி அடையவும் வேண்டாம். அமைதியாயிருங்கள். செயலும் விளைவும் எப்பொழுதும் அன்றாட வாழ்வில் உண்டு.

இப்பொழுது நீங்கள் சிரித்தால் பின்னர் நீங்கள் அழவேண்டியிருக்கும். தீய எண்ணத்துடன் எதைப் பற்றியாவது நீங்கள் மகிழ்ச்சி கொண்டால், நீங்கள் தொல்லையை விலை கொடுத்து வாங்குகின்றீர்கள் என்று அர்த்தம். சமமான தரைப் பரப்பில் நீங்கள் ஒரு மண் மேட்டை உருவாக்க விரும்பினால் வேறு ஏதாவது ஒரு இடத்தில் நீங்கல் பூமியைத் தோண்டி மண் எடுக்க வேண்டியிருக்குமே. பள்ளம் இன்றி மேடு இல்லை, கண்ணீர் இன்றி களிப்பு இல்லை. எனவே எப்போதும் சம நிலையில் இருங்கள். எப்பொழுதும் அடக்கமாக இருங்கள். எக்களிப்பையும் பெரும் சிரிப்பையும் தவிர்த்து விடுங்கள். தவிர, தற்காலிகமாக கவலையை மறைக்கும் மகிழ்ச்சியைவிட அடக்கமே மேலானது.
உங்கள் வாழ்வில் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் இறைவனது விருப்பமாக எற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்ளுங்கள். "இறைவா! உமது விருப்பமே எனக்கு நிகழும்." வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் இதுவே உங்கள் ஒரே பிரதிச் செயலாக இருக்கட்டும். உங்களது உண்மையான நண்பன் கடவுளே. அவரே நமது மிகப் பெரிய நலம் விரும்பி. உங்களை உருவாக்க, திருத்த, செம்மைப்படுத்த, அவரது விருப்பத்தை நல்லதொரு கருவியாக இருந்து செயல் படுத்த நல்லது, தீயது ஆகிய பல்வேறு அனுபவங்களை அவர் உங்களுக்குத் தருகிறார்.

அவரது தெய்வீக கரங்களால் உங்களைத் திருத்தி அமைக்க அனுமதித்து விடுங்கள். உங்களை அவரது பொறுப்பில் விட்டு விடுங்கள்.

No comments:

Post a Comment