" Inner Peace creates Outer Peace" "அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம் . அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்."

03/07/2012





                                page24

ஆன்மீகத்தில் பழுக்கலாம்!

'அகில உலகமும் தங்களது போகத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளது. அனைத்தும், அனைவரும் இந்த பரந்த உலகில் தங்களது விருப்பத்திற்கிணங்கவே செயல் பட வேண்டும். அவர்களது திட்டத்திற்கு உலகம் முழுவதும் இணங்கவேண்டும்'-என்று மன அமைதி அற்ற மக்கள் கற்பனை செய்வதுதான் அடிப்படியான தவறாகும். இந்த உலகத்திலிருந்து இன்பத்தைப் பிழிந்து எடுக்க முயலாதீர்கள். அதைவிட நல்ல பாம்பின் பல்லிலிருந்து நீங்கள் அமிருதத்தை எடுத்து விட முடியும். தோல்வி. ஏமாற்றம், கலக்கம், துன்பம் இவற்றைத்தான் நீங்கள் சந்திப்பீர்கள். அதைவிட உலகத்தில் உண்மை நிலையை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் அனுபவத்திற்காக, உங்கள் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டது இந்த உலகம். ஒவ்வொரு அனுபவத்தின் மூலமும் புத்திசாலியாக, ஆன்மீகத்தில் பழுத்தவராக மாறுங்கள். அனுபவமே சரியான கல்வி. தனது இன்பத்திற்காக இந்த உலகம் உண்டாக்கப்பட்டிருக்கிறது என்று நினைப்பவன் முட்டாளே. "அநித்யம் அஸுகம் லோகம் அசாஸ்வதம், துக்கலாயம்."

உங்கள் மறை நூல்களை-அது கீதையோ பைபிளோ, பக்தியுடன் படியுங்கள். அவற்றின் போதனைகளை எப்போதும் நினையுங்கள். அதன்படி வாழுங்கள். இதைத் தவிர மன அமைதிக்கு வேறு மார்க்கமே கிடையாது.

இந்த உலகம் ஒரு மெய்ப்பொருளா?

இறுதியாக இந்த உலகம் முழுக்கவும் பொய்யாலானது என்பதை நம்புங்கள். அனைத்து மகான்களும் ஒரே குரலில் திட்டவட்டமாக இந்த வியவஹாரிய உலகம் வெறும் கனவுலகமே, உலக அனுபவம் ஒரு மாயத்தோற்றமே என்பதைக் கூறியுள்ளனர். அவர்கள் தாங்களே அனுபவித்து உணர்ந்த பிறகுதான் இந்த உலகம் அநித்தியம், தூய உணர்வே நித்தியம் என்று கூறியுள்ளனர். அவர்கள் முட்டாள்கள் அல்ல. அல்லது நீங்கள் கெட்டிக்காரர்களும் அல்ல. கசப்பான அனுபவங்களை நீங்கள் அனுபவிக்கும் போது கூட,"இஃதனைத்தும் பொய்யே. நான் தூய உணர்வு சொரூபி. நானே கடவுள்." என்று சொல்லுங்கள்.




No comments:

Post a Comment